26

இல் - குற்றமில்லா, மாமேனி - அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள் - பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ் வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று.

நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. "செல்லான் கிழவனிருப்பினிலம்புலந், தில்லாளி னூடி விடும்" என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது: குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல்: பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை 'வானம்' பொய்யாது' என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை கரியவன் புகையினும்........ஓவிறந்தொலிக்கும்' என்னும் நாடுகாண்காதை யடிகளானறிக. 

(32)

33.  பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லாம்
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே
கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன்
தெவ்வரை யட்ட களத்து.

(ப-ரை.) கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மா இன் -குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண் தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தல் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்கா நின்ற, எஃகுஇன் - வேலோடு, அலர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின வாள் பறந்தன எ-று.

ஐது: அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங்கொண்டது. ஐ: பகுதி, து:ஒன்றன்பால் விகுதி. தாயின: அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு:பகுதி, இன்:இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது.

(33)

34.  இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்
சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க