30

(ப-ரை.) பல்வேல்- பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணைமாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி-வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால் ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானைகளெல்லாம், நிலம் சேர்ந்த (முகங்கவிழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று.

யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நினைப்பிக்கப்பட்டது.

(40)

41.  வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே
பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து.

(ப-ரை.) பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடியேறுபோன்ற முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர்நாடன்- காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால் , ஏறுண்டு - குத்தப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து செவி சாய்த்து - செவிகளைச் சாய்த்து, யானைகள் கிடத்தல்) , மா நிலம் - பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற கேட்டலை யொத்தன எ-று.

மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது, செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமையுணர்த்தப்பட்டது. அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன.

(41)

களவழி நாற்பது
முற்றும்