17

உம்-எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல் யானை - கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு - வினை செய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் தோன்றா நிற்கும் எ-று.

பள்ளி இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே 'சொல்லிய பள்ளி' என வருதலானறிக. தச்சன்-மரவினைஞன் : 'மரங்கொல் தச்சச்சிறார்' என்பன காண்க. 

(15)

16.  பரும வினமாகக் கடவித் தெரிமறவர்
ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும்
வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினையுடையரால், கடவி நடத்தப்பட்டு, ஊக்கி - மனவெழுச்சிமிக்கு, எடுத்த எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு- மிக்க ஆரவாரத்தை, அஞ்சா-அஞ்சாத, குஞ்சரம் - யானைகளின், கும்பத்து - மத்தகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் பாய்கின்ற, இரு-பெரிய, வேங்கை புலி-வேங்கையாகிய புலியை, போன்ற ஒத்தன எ-று.

பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள், கடவி செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும்.

(16)

17.  ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப்1 போன்றனவே
போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன்
ஆர்த்தம ரட்ட களத்து.


1 . 'விளக்குப்போன்றனவே' என்றும் பாடம்.