கோடுகொள்-கலை நிறைந்த, ஒள் மதியை - ஒள்ளிய சந்திரனை நக்கும் பாம்பு - தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் ஒத்திருக்கும் எ - று. குடைக்கீழ் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு-வென்றி; அசைதலும் ஆம். கோடு-பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. ‘கோடுதிரள் கொண்மூ' என்பது காண்க. நீர் நாடு : பெயர் : நீர் ஆகுபெயரும் ஆம். (22) 23. எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. (ப-ரை.) கொற்றம் - வெற்றியையுடை, வேல் - வேலையேந்திய, தானை-சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய- வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல் உள் - உதிர நீருள், நிவந்த மூழ்கியெழுந்த, களிறு உடம்பு - யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான்இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரியமேகத்தை, போன்ற - ஒத்தன எ-று. பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர்-குருதி. செக்கர்-செந்நிறம். (23) 24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை.) கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல்-மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் - காவிரி நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை -பகைவரை அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், திண்தோள் - வலிய தோளையுடைய, மறவர் வீரர்கள், எறிய - (வாளால்) எறிதலால், திசை தோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில்,
|