23

வானிலே பறந்து செல்லும், செம் வாய்-சிவந்த வாயையுடைய உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றா நிற்கும் எ - று.

புன்மை - புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப்பொருட்டு.

(26)

27.  செஞ்சேற்றுப் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர் வியன்றமிடாப்1 போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் - (உதிரத்தாற் சேறுபட்ட) செஞ்சேற்றில், செல் யானை - செல்லுகின்ற யானைகள், சீறி மிதித்தலால்-வெடிகுண்டு மிதித்தலால் (குழிந்த இடங்களில்), தொக்கு ஈண்டி நின்றவை-ஒருங்கு தொக்கு நின்ற, ஒள் ஒள்ளிய, செம் குருதிகள்-சிவந்த உதிரங்கள், பூவியன்ற செம்பூக்களையாக்கிய, நீர்மிடா - நீர்மிடாவை, போன்ற - ஒத்தன எ - று.

குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. பூநீர் வியன்றமிடா-செம் பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு. ஈண்டி:ஒரு பொருளன. 

(27)

28.  ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் 
பீடுடை வாளார்2 பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ டற்ற தடக்கைகொண்3 டோடி
இகலன்வாய்த் துற்றிய4 தோற்ற மயலார்க்குக் 
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு


1. 'பூவியன்ற நீர்மிடா' என்று பாடங்கொள்ளுதல் வேண்டும்.
2. 'வாளர்' என்றும்,
3. 'ஓரி இகலனவாய்' என்றும்,
4. 'வாய்துற்றிய' என்றும் பாடம்.