தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
|
||
16. | பரும இன மாக் கடவி, தெரி மறவர் ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும் வேங்கை இரும் புலி போன்ற-புனல் நாடன் வேந்தரை அட்ட களத்து. |
உரை |
17. | ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி, தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே- போர்க் கொடித் தானை, பொரு புனல், நீர் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. |
உரை |
18. | நளிந்த கடலுள் திமில் திரைபோல், எங்கும் விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும்-தெளிந்து தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய் உடற்றியார் அட்ட களத்து. |
உரை |
19. | இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி, கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து, முக்கோட்ட போன்ற, களிறு எல்லாம்-நீர் நாடன் புக்கு அமர் அட்ட களத்து. |
உரை |
20. | இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச் சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற-புனல் நாடன் நேராரை அட்ட களத்து. |
உரை |