தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
|
||
21. | இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து, கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய், தொல் வலியின் தீர, துளங்கினவாய், மெல்ல நிலம் கால் கவவு மலை போன்ற-செங் கண் சின மால் பொருத களத்து. |
உரை |
22. | இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல் ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள் ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே- பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் கூடாரை அட்ட களத்து. |
உரை |
23. | எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து நெய்த்தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு, செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றனவே- கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன் செற்றாரை அட்ட களத்து. |
உரை |
24. | திண் தோள் மறவர் எறிய, திசைதோறும் பைந் தலை பாறிப் புரள்பவை, நன்கு எனைத்தும் பெண்ணை அம் தோட்டம் பெரு வளி புக்கற்றே- கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
உரை |
25. | மலை கலங்கப் பாயும் மலைபோல் நிலை கொள்ளாக் குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு வானம் துடைப்பன போன்ற-புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
உரை |