களவழி நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
 
26. எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு, எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும்-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.
உரை
   
27. செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற-புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.
உரை
   
28. ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும்-புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.
உரை
   
29. கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப-செங் கண்
சின மால் பொருத களத்து.
உரை
   
30. மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்-
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து.
உரை