தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 41 வரை
|
||
36. | ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,- காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள், மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய், ஆ உதை காளாம்பி போன்ற,-புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
உரை |
37. | அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும் பௌவம் புணர் அம்பி போன்ற-புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. |
உரை |
38. | பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து உரும் எறி பாம்பின் புரளும்-செரு மொய்ம்பின், பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன் துன்னாரை அட்ட களத்து. |
உரை |
39. | மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள், புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை பஞ்சி பெய் தாலமே போன்ற-புனல் நாடன் வஞ்சிக்கோ அட்ட களத்து. |
உரை |
40. | வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல், எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த-பல் வேல், பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால் கணை மாரி பெய்த களத்து. |
உரை |
41. | வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து, மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே- பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் கூடாரை அட்ட களத்து. |
உரை |