தொடக்கம் | ||
களவழி நாற்பது பாடல் தொகுப்பு 1 முதல் 5 வரை
|
||
1. | நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து, முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல் துப்புத் துகளின் கெழூஉம்-புனல் நாடன் தப்பியார் அட்ட களத்து. |
உரை |
2. | ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப் போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ் நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற-புனல் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. |
உரை |
3. | ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார், இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து. |
உரை |
4. | உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில் செல் சுடர் சேர்ந்த மலை போன்ற-செங் கண் மால் புல்லாரை அட்ட களத்து. |
உரை |
5. | தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து, குக்கில் புறத்த; சிரல் வாய-செங் கண் மால் தப்பியார் அட்ட களத்து. |
உரை |