கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார்காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிற வேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும் மெலிவின் பால' என்பது திவாகரம். பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. (16) இதுவுமது. 17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப் பறைக்குர லேறொடு பௌவம் பருகி உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல். (ப-ரை.) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக் குரல் ஏறொடு பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்பு சவட்டி பாம்புகளை வருத்தி, அறைக்கல் பாறைகற்களையுடைய, இதுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து, இருள் கூர்ந்தன்று - இருளைமிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத் தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ-று. இறுவரை - பக்கமலை. சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்' எனப் பதிற்றுப்பத்திலும் இச் சொல் இப் பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. பௌவம் : ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று : கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினைமுற்று. இருள் கூர்ந்தன்று : ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று. (17) இதுவுமது. 18 கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை யேறொடு வான நடுநிற்பச் செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு. (ப-ரை.) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் காட்டைக் கடந்து சென்ற தலைவர் : வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்தபொழுதே, வானம் - மேகங்கள், நல்இசை - மிக்க
|