பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு, சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின எ-று. இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அருநெறியுமாம். கவ்வை - அலர்; ஊரார் கூறும் பழமொழி. அழுங்கல் வருந்துதல்; ஈண்டு இலவாதல். (28) இதுவுமது. 29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ் செவ்வி யுடைய சுரம். (ப-ரை.) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின்கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடாநின்றன; பகைகொண்டல், பகைத்தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் எல்லாத்திசைக் கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும் செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக் கடவேம், எ-று. பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் : வினைத்தொகை சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தித் தேர்ப்பாகற்குக் கூறியதுமாம். (29) இதுவுமது. 30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருநிலந் தீம்பெய றாழ - விரைநற1 ஊதை யுளரு நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட் டுரைத்து. (ப-ரை.) வரைமல்க - மலைகள் வளம் நிறைய, வானம் சிறப்ப வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரிய பூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை விழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழாநிற்க, ஊதை காற்றானது, பேதை
1. திரை நாற என்றும் பாடம்.
|