(ப-ரை.) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்புகின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படாமகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள்; கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகை யாளிடத்து, நன்கு - நன்றாக, பாண் முரலும் - இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக்கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ-று. இப் பாட்டு நன்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாடமோதுவாரு முளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு. ‘கொடுஞ்செலவெழிலி' என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாண்மக்கள் பரிசில் கருதிப் பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின வென்றுரைக்கப்பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது நற்கு : வலித்தல் விகாரம். (32) இதுவுமது. 33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்1 இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி யெவ்வங் கெட. (ப-ரை.) கடல்நீர் முகந்த - கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி - நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து - மேற்கு மலையிடத்து. கொள் அப்பு இறைக்கும் - தான் கொண்ட, நீரினைச் சொரியும், இடம் என - சமயமென்று, ஆங்கே அப்பொழுதே, பேதை - பேதையாகிய, மடமொழி மடப்பத்தினையுடைய மொழியை யுடையாளது, எவ்வம் கெட - வருத்தம் நீங்க, குறி செய்தேம் - (மீளுங்காலத்திற்குந்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக) எ-று. சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ‘கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை' என்பது திருமுருகாற்றுப்படைஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத்தோன்றும் எனப் பொரு
1. கொள்ளப் பிறக்கும் என்றும் பாடம்.
|