ளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்துமேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. (33) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது 34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து. (ப-ரை.) பெருவிறல் வானம் - மிக்க பெருமையையுடைய மேகம், விரிதிரை வெள்ளம் - விரித்த அலையையுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி - நிறைய உண்டு, பெருவரை சேரும் - பெரிய மலையை அடையாநிற்கும், கரு அணி காலம் - கருங்கொள்ளுங் காலத்தை, திரு அணி - தெய்வ வுத்தியென்னும் தலைக்கோலத்தை யணிந்த, ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து காதலியிடத்து, குறித்தார் - (தலைவர் தாம் மீண்டுவருங் காலமாகக்) குறிப்பிட்டார் எ-று. வெறுத்தல் - செறித்தல், நிறைதல்; உரிச்சொல், கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழையாகலின் ‘பெருவிறல் வானம்' என்றார். கரு அணிகாலம் - மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு - சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; ‘தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின் வைத்து' என்பது திருமுருகாற்றுப்படை. . (34) இதுவுமது. 35. 1சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு. (ப-ரை.) சென்ற நம் காதலர் - வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி - நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென்று நினைத்து, ஒன்றிய நோயோடு - பொருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர - பல துன்பங்களும் மிகப் பெறுதலால், இவட்கு - இவள் பொருட்டு, எழில்வானம் - எழுச்
1. சென்று என்றும் பாடம்.
|