29

(ப-ரை.) கருங்கடல் மேய்ந்த - கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் - நிறைந்த சூலினையுடைய, எழிலி - மேகம், இரு பெரிய, கல் - கற்களையுடைய, இறுவரை - பக்க மலையிமேல், ஏறி உயிர்க்கும் - ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக்காலையும் - மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் அரசனது, அருந்தொழில் - போர்த்தொழில், வாய்த்த வாய்க்கப்பெற்ற, நமர் - நம் தலைவர், வாரார்கொல் வாராதிருப்பாரோ எ-று.

கடல் : ஆகுபெயர். சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த்தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வாராதிரார் என்று கூறித்தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க.

(37)

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை
ஆற்றுவித்தது

38. புகர்முகம் பூழிப்1 புரள வுயர்நிலைய2
வெஞ்சின் வேழம் பிடி யோ டிசைந்தாடுந்3
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒன்டொடி யூடு நிலை.

(ப-ரை.) உயர்நிலைய - உயர்ந்த நிலையினையுடைய, வெம்சினம் வேழம் - கடி கோபத்தினையுடைய ஆண் யானைகள், புகர்முகம் - புள்ளியினையுடைய முகம், பூழி புரள - புழுதியிற் புரளும் வகை, பிடியோடு - பெண் யானைகளுடன், இயைந்து ஆடும் - கூடி விளையாடும், தண் பதக் காலையும் - குளிர்ந்த - செவ்வியையுடைய காலத்தும், வாரார் - நம் தலைவர் வாராராயினார்; (ஆதலால்), ஒள்தொடி - ஒள்ளிய தொடியினையுடையாளே, ஊடு நிலை - அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் - என்னை, எ-று.

வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும், வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையராயினார்பால் ஊடுதலாற்


1. பூமி புரள என்றும்

2. உயர்நிலை என்றும்

3. இணைதாழ என்றும் பாடம்.