பயனென்னை என்று தோழி கூறினாளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். (38) இதுவுமது 39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த 1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை ஆகின்று நம்மூ ரவர்க்கு. (ப-ரை.) அலவன்கண் ஏய்ப்ப - ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று - அரும்பினை யீன்று, அவிழ்ந்த - பின் மலர்ந்த, கருங்குரல் - கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி நொச்சியினது, பசுந்தழை சூடி - பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் - பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் - உழவர் புதிதாக ஏருவிழுக்கத் தொடங்கினார்கள்; (ஆதலால்), நாம் ஊர் நம் ஊரின் கண், அவர்க்கு - நம் தலைவர்க்கு, பெருங்கௌவை ஆகின்று - பெரிய அலராயிற்று, எ-று. நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை ‘நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொகுதி' என்னும் நற்றிணையானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். ஆகின்று : உடம்பாட்டு முற்று. (39) பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழிதலைமகளை ஆற்றுவித்தது 40. வந்ததன செய்குறி வாரா ரவரென்று நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி இந்தின் 2கருவண்ணங் கொண்டன் றெழில்வானம் நந்துமென் பேதை நுதல். (ப-ரை.) மென் பேதை - மெல்லிய பேதையே, செய் குறி - தலைவர் செய்த குறிகள், வந்தன - வந்துவிட்டன; அவர் வாரார்
1. கருங்கதிர் என்றும் பாடம். 2. களிவண்ணம் என்றும், கொண்டது என்றும் பாடம்.
|