31

என்று - தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி - நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் - அழகிய முகில், இந்தின்கருவண்ணம் - ஈந்தின் கனியினிறம்போலும் கருநிறத்தை, கொண்டன்று - கொண்டது; நுதல் நந்தும் - நினது நுதல் இனி ஒளிவரப்பெறும், எ-று.

இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப்பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர். ஈந்து இந்தெனக் குறுகியது; ‘முந்நீரை யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ' என்பது திணைமாலை நூற்றைம்பது.ஈந்து - ஈச்சமரம்.

(40)

முற்றிற்று