நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிறமலர்த் தாரினைப் போலும் என்க. தாழ :நிகழ்காலவினையெச்சம். வருதும் : தனித் தன்மைப் பன்மை வருவர் என்பது குறிப்பாற் போந்தது. (1) இதுவுமது 2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1 இன்னே வருவர் நமரென் றெழில்வானம் மின்னு மவர்தூ துரைத்து. (ப-ரை.) கொடுங்குழாய் - வளைந்த குழையையுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு - நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது, எ-று. கடுங்கதிர் : அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப்படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் : ஆகுபெயர் முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன. (2) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது 3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந் தயிர்மணற் றண்புறவி னாலி - புரள உருமிடி வான மிழிய வெழுமே2 நெருந லொருத்தி திறத்து. (ப-ரை.) வரிநிறப் பாதிரி வாட - வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளி போழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப்
1. கொடுங்குழை என்றும் பாடம் 2. இழிந்தெழுந் தோங்கும் என்றும் பாடம்.
|