கார் நாற்பது பாடல் தொகுப்பு 1 முதல் 5 வரை
 
1.

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
‘வருதும்’ என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?

உரை
   
2. கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன,-கொடுங்குழாய்!-
‘இன்னே வருவர், நமர்’ என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.
உரை
   
3.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது
ஆற்றாமை தோன்ற உரைத்தது

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.
உரை
   
4.

தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம்,-பணைத் தோளி!-
வாடும் பசலை மருந்து.
உரை
   
5. இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-
பகழிபோல் உண் கண்ணாய்!-பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு.
உரை