கார் நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
 
16. கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும்-பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள.
உரை
   
17. அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பௌவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை
கொண்டன்று,-பேதை!-நுதல்.
உரை
   
18. கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற,-நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு.
உரை
   
19.

வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது

நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு.
உரை
   
20. வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.
உரை