கார் நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
 
26.

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
உரை
   
27.

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது

முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
‘உள்ளாது அகன்றார்’ என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு.
உரை
   
28.

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செவ்வி உடைய, சுரம்-நெஞ்சே!-காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு.
உரை
   
29. பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,
செவ்வி உடைய சுரம்.
உரை
   
30. வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,
ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து.
உரை