கார் நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 40 வரை
 
36.

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது

சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப
ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க
செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்கு.
உரை
   
37.

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

கருங் கடல் மேய்ந்த கமஞ் சூல் எழிலி
இருங் கல் இறுவரை ஏறி, உயிர்க்கும்
பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந் தொழில் வாய்த்த நமர்?
உரை
   
38.

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை
ஆற்றுவித்தது

புகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய
வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,-
ஒண்டொடி!-ஊடும் நிலை?
உரை
   
39. அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி,
இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கௌவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு.
உரை
   
40.

பருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

‘வந்தன செய் குறி; வாரார் அவர்’ என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
நந்தும்,-மென் பேதை!-நுதல்.
உரை