துகள் தீர் பெருஞ் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க-
அகடு உற யார் மாட்டும் நில்லாது. செல்வம்
சகடக்கால் போல வரும்!