'செல்வர் யாம்!' என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ் செல்வம், எல்லில்
கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கு அறக் கெட்டுவிடும்.