கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்;
அடுக்கிய மூஉலகும் கேட்குமே, சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல்.