முன்னரே, சாம் நாள், முனிதக்க மூப்பு, உள;
பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள; கொன்னே
பரவன்மின்; பற்றன்மின்; பாத்து உண்மின்; யாதும்
கரவன்மின், கைத்து உண்டாம் போழ்து.