சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா,
உறு காலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும்,
சிறுகாலைப் பட்ட பொறியும்; அதனால்,
இறுகாலத்து, என்னை பரிவு?