அறியாரும் அல்லர்; அறிவது அறிந்தும்,
பழியோடு பட்டவை செய்தல்,-வளி ஓடி
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப!-
செய்த வினையான் வரும்.