தாம் செய் வினை அல்லால், தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின், பிறிது இல்லை; ஆங்குத் தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயன் இன்றே,
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது.