கால் ஆடு போழ்தில், கழி கிளைஞர், வானத்து-
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர்; ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால்,-ஈர்ங் குன்ற நாட!-
'தொடர்பு உடையேம்' என்பார் சிலர்.