யாஅர், ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் துணைமை உடையவர்?-சாரல்
கன மணி நின்று இமைக்கும் நாட! கேள்:-மக்கள்
மனம் வேறு; செய்கையும் வேறு.