உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்,
குடிப் பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்;-
இடுக்கண் தலைவந்தக்கண்ணும், அரிமா
கொடிப் புல் கறிக்குமோ மற்று?