பாட்டு முதல் குறிப்பு
செல்லா இடத்தும் குடிப் பிறந்தார் செய்வன,
செல் இடத்தும் செய்யார், சிறியவர்;-புல்வாய்
பருமம் பொறுப்பினும், பாய் பரிமாபோல்
பொரு முரண் ஆற்றுதல் இன்று.
உரை