அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; திங்கள்
மறு ஆற்றும்; சான்றோர் அஃது ஆற்றார்; தெருமந்து
தேய்வர், ஒரு மாசு உறின்.