'உடையார் இவர்' என்று, ஒருதலையாப் பற்றி,
கடையாயார் பின் சென்று வாழ்வர்; உடைய
பிலம் தலைப்பட்டது போலாதே, நல்ல
குலம் தலைப்பட்ட இடத்து?