கள்ளார்; கள் உண்ணார்; கடிவ கடிந்து ஒரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார்; தள்ளியும்,
வாயின் பொய் கூறார்;-வடு அறு காட்சியார்-
சாயின், பரிவது இலர்.