'பொறுப்பர்' என்று எண்ணி, புரை தீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின்,-
ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட!-
பேர்க்குதல் யார்க்கும் அரிது.