அவமதிப்பும், ஆன்ற மதிப்பும், இரண்டும்,
மிகை மக்களால் மதிக்கற்பால; நயம் உணரா,
கை அறியா, மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்,
வையார், வடித்த நூலார்.