விரி நிற நாகம் விடர் உளதேனும்,
உருமின் கடுஞ் சினம் சேண் நின்றும், உட்கும்;-
அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்,
பெருமை உடையார் செறின்.