நளி கடல் தண் சேர்ப்ப! நாள் நிழல் போல
விளியும், சிறியவர் கேண்மை; விளிவு இன்றி,
அல்கு நிழல்போல், அகன்று அகன்று ஓடுமே,
தொல் புகழாளர் தொடர்பு.