மன்னர் திருவும், மகளிர் எழில் நலமும்,
துன்னியார் துய்ப்பர்; தகல் வேண்டா;-துன்னிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை, தம்கண் சென்றார்க்கு ஒருங்கு.