அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்து ஒழுகியவ்வும், நெறி அறிந்த
நற் சார்வு சார, கெடுமே-வெயில் முறுகப்
புற் பனிப் பற்று விட்டாங்கு.