'இச் சார்வின் ஏமாந்தேம்; ஈங்கு அமைந்தேம்' என்று எண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவர், பேதையார்; 'அச் சார்வு
நின்றன போன்று நிலையா' என உணர்ந்தார்,
என்றும் பரிவது இலர்.