உறு புனல் தந்து, உலகு ஊட்டி, அறும் இடத்தும்
கல்லுற்றுழி ஊறும் ஆறேபோல், செல்வம்
பலர்க்கு ஆற்றி, கெட்டு உலந்தக்கண்ணும், சிலர்க்கு ஆற்றிச்
செய்வர், செயற்பாலவை.