பாட்டு முதல் குறிப்பு
சொல் தளர்ந்து, கோல் ஊன்றி, சோர்ந்த நடையினர் ஆய்,
பல் கழன்று, பண்டம் பழிகாறும் இல்-செறிந்து
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே-
ஏம நெறி படரும் ஆறு.
உரை