கோள் ஆற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங் கூழ்போல்,
கேள் ஈவது உண்டு, கிளைகேளா துஞ்சுப;
வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ, தவறு?