நல்ல குலம் என்றும், தீய குலம் என்றும்,
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை; தொல் சிறப்பின்
ஒண் பொருள் ஒன்றோ? தவம், கல்வி, ஆள்வினை,
என்று இவற்றான் ஆகும், குலம்.