வயாவும், வருத்தமும், ஈன்றக்கால் நோவும்,
கவாஅன் மகற் கண்டு தாய் மறந்தாஅங்கு,
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத் தன்
கேளிரைக் காண, கெடும்.