விருப்பு இலார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்
வெருக்குக் கண் வெங்கருனை வேம்பு ஆம்; விருப்புடைத்
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர்த் தண் புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.