பாட்டு முதல் குறிப்பு
நாய்க் கால் சிறு விரல்போல் நன்கு அணியர் ஆயினும்,
ஈக் கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
உரை